தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் உள்பட்டமைப்பு மேம்படுத்தும் வகையில் ரூ.33,066 கோடியில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று அவை விதி 110-ன் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டார்.அதில், தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் மின் நுகர்வு காரணமாக, மின் விநியோகத் துறைகளில் விரிவான, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துடன் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டியது அவசியம்.எனவே, தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் சென்னை போன்ற முக்கிய மின் நுகர்வு மையங்களுக்கு கொண்டு வர, மின் தொடரமைப்பை அதிரிக்க வேண்டியது அவசியம். எனவே, ரூ.33,066 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் தொடரடைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.இந்த திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் சுமார் 196 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின் பாதைகள் அமைக்கப்படும். பல வழித்தடங்களில் ஏற்கனவே உள்ள மின்பாதைகள் வலுப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.மேலும், மின் பகிர்மான கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளின் கீழ் தமிழ்நாட்டில் 36 புதிய 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.புதிய மின் பகிர்மான மின் மாற்றிகள் நிறுவப்படும்.சேதமடைந்த மற்றும் பயன்பாட்டுக் காலம் நிறைவடைந்த கேபிள்கள், மின் கடத்திகள், பில்லர் பாக்ஸ், சர்க்யூட் பிரேக்ஸ் உள்ளிட்ட உபகரணங்கள் மாற்றப்படும்.இவை அனைத்தும் ரூ.1762 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். Tamil Nadu Power Transmission Infrastructure Development Scheme: Chief Minister's Announcement