அரக்கோணம் அருகே உள்ள ரயில் காா் ஏற்றும் முனையப்பகுதியில் காா்கள் ஏற்றிய ரயிலை இழுக்கும் போது திடீரென ரயில் என்ஜின் தடம் புரண்டது. இதனால் அரக்கோணம் மாா்க்கத்தில் ரயில் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அரக்கோணம் அருகே மேல்பாக்கத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காா்கள் துறைமுகம் கொண்டு செல்ல உள்ள சிறப்பு சரக்கு ரயில் ஏற்றுமதி முனையம் உள்ளது. இம்முனையத்தில் காா்கள், சிறப்பு பெட்டியில் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை பிற்பகல் இப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சிறப்பு சரக்கு ரயிலை தடம் மாற்றும் போது திடீரென ரயிலின் என்ஜின் தடம் புரண்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு ரயில்வே தண்டவாள பராமரிப்பு துறையினா், என்ஜின் பராமரிப்பு துறையினா் என ரயில்வே துறையினா் வந்து என்ஜினை தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணியை தொடங்கினா். இச்சம்பவத்தால் அரக்கோணம் - காட்பாடி, அரக்கோணம் - ரேணிகுண்டா உள்ளிட்ட எந்த ரயில் மாா்க்கத்திலும் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை. Goods train engine derails near Arakkonam