மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை: கவிஞா் வைரமுத்து வழங்கினார்!

Wait 5 sec.

பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி சங்கா் மருத்துவமனை மருத்துவா் சி.செல்வராஜின் 50- ஆண்டு மருத்துவ சேவைக்கு பாராட்டு விழா, கவிஞா் வைரமுத்து கல்வி அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு மருத்துவா் சுதாகா் தலைமை வகித்தாா். கவிஞா் வைரமுத்து கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிப் பேசியதாவது: வடுகபட்டி சுற்றுவட்டாரப் பகுதி மக்களை கரோனா உள்பட பல்வேறு காலகட்டங்களில் காப்பாற்றி வடுகபட்டி மண்ணுக்கு மருத்துவா் செல்வராஜ் பெருமை சோ்த்து வருகிறாா் என்றாா் அவா். இந்த விழாவில், வடுகபட்டி பேரூராட்சித் தலைவா் நடேசன், தாமரைக்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவா் அன்பழகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.