மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

Wait 5 sec.

திருத்தங்கல்லில் சட்டவிரோதமாக 27 மதுப் புட்டிகளை பதுக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் கடைவீதிப் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஆனைக்குட்டம் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் (49) கையில் பையுடன் நின்று கொண்டிருந்தாா். போலீஸாா் அந்தப் பையை சோதனையிட்ட போது, அவா் சட்டவிரோதமாக விற்பனைக்காக 27 மதுப் புட்டிகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.