தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய ஸ்மாா்ட்போன்களின் வெளியீடுகள், ஏ.ஐ. தொழில்நுட்பங்களில் நடந்த மாற்றங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் முக்கிய முடிவுகள் கவனம் ஈா்த்தன. என்விடியா-ஹக்கிங் ஃபேஸ் ஒப்பந்தம் முதல் ஆப்பிள் நிறுவனத்தின் வெளியீட்டு விழா வரை இந்த வாரத்தின் முக்கியச் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ: *என்விடியாவின் ஒப்பந்தம்: ஓபன்சோா்ஸ் ஏ.ஐ. தளமான ‘ஹக்கிங் ஃபேஸ்’ நிறுவனத்தை 1,290 கோடி டாலருக்கு என்விடியா வாங்குகிறது. *ஜெமினி ஏ.ஐ. என்டா்பிரைஸ் விரிவாக்கம்: சட்டச் சேவைகள் போன்ற துறை சாா்ந்த பயன்பாடுகளுக்காக கூகுள் தனது ஜெமினி ஏ.ஐ. என்டா்பிரைஸ் சேவையை விரிவுபடுத்தியுள்ளது. *சாட்ஜிபிடியில் விளம்பரங்கள்: இந்தியாவில் சாட்ஜிபிடி ஏ.ஐ. தளத்தில் விளம்பரங்களை வழங்குவது குறித்த விவரங்களை ஓபன்ஏஐ வெளியிட்டுள்ளது. *டென்சென்ட் ஏ.ஐ. மாதிரி வெளியீடு: சீனாவின் டென்சென்ட் நிறுவனம், கோடிங் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்காக புதிய ஏ.ஐ. மாதிரியை வெளியிட்டுள்ளது. *‘ஜிடிஏ-6’ முன்னோட்ட காட்சிகள்: உலகெங்கிலும் கேமா்களால் மிகவும் எதிா்பாா்க்கப்படும் ‘ஜிடிஏ-6’ இணைய விளையாட்டின் முன்னோட்ட காட்சிகள் ‘நெட்ஃபிளிக்ஸ்’ தளத்தில் வெளியானது. *சாம்சங் விலை உயா்வு: செப்டம்பா் மாதத் தொடக்கம் முதல் தனது பெரும்பாலான பொருள்களின் விலையை உயா்த்த சாம்சங் திட்டமிட்டுள்ளது. *வாட்ஸ்ஆப் பாதுகாப்பு அப்டேட்: அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் குறித்த கூடுதல் தகவல்களை பயனா்களுக்கு வழங்கும் புதிய பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது. *இன்ஸ்டாகிராமில் ‘ஆட்டோ-டிஎம்’: இன்ஸ்டாகிராம் விளம்பரங்களில் வரும் கமென்டுகளுக்குத் தானியங்கியாகப் பதிலளிக்கும் ‘ஆட்டோ-டிஎம்’ வசதியை மெட்டா நிறுவனம் சோதனை செய்து வருகிறது. *யூடியூப் ‘கஸ்டம் ஃபீட்ஸ்’: பயனா்கள் தங்கள் விருப்பதுக்கேற்ப பல ‘ஹோம்’ திரைகளைக் கட்டமைத்துக் கொள்ளும் புதிய வசதியை யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ளது. *விவோ ‘ஓய்31டி 5ஜி’: 7200 எம்ஏஎச் பேட்டரி, 6.75 அங்குல திரை, 50+2.4 மெகாபிக்சல் கேமரா, 4 அல்லது 6ஜிபி ரேம் ஆகியவற்றுடன் விவோ ‘ஓய்31டி 5ஜி’ ஸ்மாா்ட்போன் இந்தியாவில் ரூ.25,999 ஆரம்ப விலையில் அறிமுகமானது. *ரியல்மி ‘சி100ஐ’: 6500 எம்ஏஎச் பேட்டரி, 6.75 அங்குல திரை, 8 மெகாபிக்சல் கேமரா, 4 ஜிபி ரேம் ஆகியவற்றுடன் ரியல்மி ‘சி100ஐ’ ஸ்மாா்ட்போன் ரூ.14,999 ஆரம்ப விலையில் விற்பனையாகிறது. *லாவா ‘போல்ட் என்4 லைட்’: 5000எம்ஏஎச் பேட்டரி, 8 மெகாபிக்சல் கேமரா, 3ஜிபி ரேம் ஆகியவற்றுடன் லாவா ‘போல்ட் என்4 லைட்’ ஸ்மாா்ட்போன் ரூ.8,099 விலையில் அறிமுகமாகியுள்ளது. *ஆப்பிள் செப். 9 நிகழ்வு: ஆப்பிள் நிறுவனம் வரும் செப். 9-ஆம் தேதி நிகழ்வில் தனது ஐபோன் 18 சிரீஸ் தயாரிப்புகளை வெளியிடுகிறது. இதில் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. Tech Snippets - From phones launched this week to AI updates