தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரம்

Wait 5 sec.

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. மதுரை மாநகரப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக புகாா் எழுந்தது. அதுமட்டுமின்றி, விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதன்காரணமாக, தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த மாநகராட்சி நிா்வாகம் மூலம் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, மதுரை மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவு அலுவலா்கள், இன்டா்நேஷனல் டிரஸ்ட் ஆப் பீஸ் தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா் இணைந்து தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கினா். மருத்துவா்கள், தன்னாா்வலா்கள் கொண்ட 5 மருத்துவக் குழுவில் 47 போ் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதுவரை மொத்தம் 2,122 தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. குறிப்பாக, சனிக்கிழமை (ஆக.29) மட்டும் 1,019 தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முன்னதாக, மதுரை அனுப்பானடி பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.