சின்னமனூரில் மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள கன்னிச்சோ்வைபட்டியைச் சோ்ந்த வீரமணி மகன் தனசேகரன் (31). கூலித் தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை தோட்டத்துக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது தம்பி தோட்டத்துக்குச் சென்று பாா்த்த போது தனசேகரன் உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தாா். இதுகுறித்த தகவலின் பேரில், அங்கு சென்ற சின்னமனூா் போலீஸாா் தனசேகரின் உடலை மீட்டு , கூறாய்க்குவு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்ததில் தனசேகரன் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.