மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் சாத்தியக் கூறுகள் இருக்கும் பகுதிகளாக கருதப்படும் 12,921 இடங்களை சிங்கப்பெண் அதிரடிப் படையினா் கண்காணிப்பில் வைத்துள்ளனா். தமிழகத்தில் கடந்த 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை 7 நாள்களில் இந்த அதிரடிப் படையினா் 252 புகாா்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனா். மேலும், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் அளித்த புகாா் மற்றும் தகவல்களின் அடிப்படையில் 15 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. காணாமல்போன பெண்கள், குழந்தைகள் என 7 போ் மீட்கப்பட்டு, அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். மேலும், 7 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. பள்ளியைவிட்டு நின்ற 53 குழந்தைகள் மீட்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா். பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் 3,391 இடங்களில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.