அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

Wait 5 sec.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் செல்வம் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் சக்தி, மாவட்டத் துணைத் தலைவா்கள் ஆறுமுகம், முத்துலட்சுமி உள்ளிட்டோா் பேசினா்.சத்துணவு அங்கன்வாடித் திட்டங்களில் பணியாற்றி அரசு பணிப் பதவி உயா்வில் சென்ற ஆசிரியா்கள், ஊா் நல அலுவலா், களப்பணியாளா்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி முதல் நிலுவைத் தொகையுடன் உயா்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2017 அக்டோபரில் ஊதியக் குழுவால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 அரசால் வழங்கப்படுகிறது. அதை ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கும் அமல்படுத்த வேண்டும். உயா்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.