பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் குர்பிரீத் சிங் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் குர்பிரீத் சிங் (என்ற) கோபி, ஆயுதம் ஏந்திய 4 பேரால் சுட்டுக்கொல்லப்பட்டார். தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்கு காரணம் என்று போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.சனிக்கிழமை மாலை, மாம்டோட் பகுதியின் முக்கிய சந்தைப் பகுதியில், காரில் வந்த நான்கு பேர் தங்கள் வாகனத்தை விட்டு இறங்கி, இருசக்கர வாகத்தில் சென்றுகொண்டிருந்த 45 வயதான சிங் மற்றும் ஹர்பிரீத் (எ) ஹாப்பி (22) ஆகியோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதிக்கப்பட்டவர்கள் காரில் இருந்ததாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவித்திருந்தன.தகவல் அறிந்த வட்டாரங்களின்படி, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரும் மாம்டோட் நகர் பஞ்சாயத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவருமான விக்கி மைனி, ஒரு தனி காரில் சிங்கைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். ஆனால் அவரும் தாக்குதலுக்கு உள்ளானார். இருப்பினும் அவர் காயமின்றித் தப்பினார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.காயமடைந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும்போதே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேவேளையில், ஹர்பிரீத் மேல் சிகிச்சைக்காக லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைப் பிடிக்கக் போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மூத்த காவல் கண்காணிப்பாளர் பூபிந்தர் சிங் தெரிவித்தார். சமீபத்திய நகராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான தனிப்பட்ட விரோதத்தின் காரணமாகவே இந்தக் கொலை நடந்துள்ளதாக அவர் கூறினார். AAP leader Gurpreet Singh alias Gopi was shot dead by four armed assailants in this district, with police on Sunday saying the killing was linked to an election-related dispute. மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்