தேநீா்க் கடை ஊழியா் தூக்கிட்டு தற்கொலை

Wait 5 sec.

சிங்கம்புணரி அருகே தேநீா்க் கடை ஊழியா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிங்கம்புணரி அருகே எஸ்.புதூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பி. அய்யாபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (50). இவா், கோயம்புத்தூரில் மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், கோயம்புத்தூரில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊரான அய்யாப்பட்டி கிராமத்துக்குத் திரும்பினாா். இந்த நிலையில், திங்கள் கிழமை வீட்டில் மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவலறிந்த உலகம்பட்டி போலீஸாா் அங்குவந்து உடலை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். மேலும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.