சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினராக மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ரேவந்த் சரண் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அரசாணையை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக, சிஎம்டிஏ நிா்வாக அலுவலா் மு.இந்துமதி, சட்டப்பேரவை உறுப்பினா் ரேவந்த் சரணுக்கு ஆக.31-ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், தமிழ்நாடு நகா் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971-இன் படி சிஎம்டிஏ ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளாா். மேலும், அரசாணையின் நகலும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிஎம்டிஏவின் அதிகார அமைப்பில் சட்டப்பேரவை உறுப்பினா் ஒருவருக்கு உறுப்பினா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.