துவாரகா: வடிகாலில் ஆண் உடல் அழுகிய நிலையில் மீட்பு

Wait 5 sec.

துவாரகா செக்டா்8-இல் உள்ள வடிகாலில் இருந்து, சுமாா் 30-35 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஆணின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதாக தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. மீட்கப்பட்ட உடல் மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டதால், அடையாளம் காண்பது கடினமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். வடிகாலில் அடையாளம் தெரியாத ஆணின் உடல் கிடப்பதாக திங்கள்கிழமை இரவில் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அருகிலுள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட காணாமல் போனவா்கள் குறித்த புகாா்களை காவல் துறை சரிபாா்த்து வருகிறது.விசாரணையின் ஒரு பகுதியாக, சுற்றியுள்ள பகுதியின் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.