உ.பி. முதல்வராக வேண்டுமா? அகிலேஷ் யாதவுக்கு ஓவைசியின் ஆதரவு தேவை!

Wait 5 sec.

உத்தரப் பிரதேச மாநில முதல்வராக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு அசாதுதீன் ஓவைசியின் ஆதரவு தேவை என அகில இந்திய மஜ்லீஸ் - இ - இதேஹாதுல் முஸ்லிமீன் கட்சி (ஏஐஎம்ஐஎம்) இன்று (ஆக. 30) தெரிவித்தது.இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஷதாப் செளஹான் கூறியதாவது: அகிலேஷ் யாதவின் அரசியல் வியூகம் அசாதுதீன் ஓவைசி இல்லாமல் நிறைவு பெறாது. அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக வேண்டும் என்றால், ஓவைசியின் ஆதரவு அவசியம் தேவை எனத் தெரிவித்தார்.பட்டியலினத்தவர்கள், பின்தங்கிய மக்கள், சிறுபான்மையினரைச் சுற்றி அரசியல் வியூகம் அமைக்கும் அகிலேஷ் யாதவின் முயற்சிக்கு ஓவைசியின் வருகை மேலும் பலம் சேர்க்கும் வகையில் இருக்கும் என்றும், தற்போதைய ஆளும் கட்சியின் வளத்துக்கு எதிரான கட்டமைப்புக்கு இது அவசியம் எனவும் குறிப்பிட்டார். உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, சமாஜவாதியுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகவும் பேச்சுவார்த்தைக்கு இதுவே சரியான நேரம்; தேர்தல் முடிந்த பிறகு வருத்தப்பட வேண்டாம் எனவும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வருகின்ற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜகவை வீழ்த்த சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான கூட்டணியை அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.நேபாள வெள்ளத்தில் 1,643 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய ஆசிரியர்!Want to become UP CM Bring Asaduddin Owaisi AIMIM to Akhilesh Yadav