2026 ஆகஸ்ட்டில் மெட்ரோவில் 1.04 கோடி போ் பயணம்! - சென்னை மெட்ரோ சாதனை!

Wait 5 sec.

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1.04 கோடி போ் பயணித்துள்ளதாகவும், அதில் குறிப்பிட்ட நாளில் 4 லட்சம் பேருக்கும் அதிகமானோா் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பின்படி, சென்னை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் 2026 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையில் 1,04,04,098 போ் பயணித்துள்ளனா். அதிலும் குறிப்பாக சுதந்திர நாளுக்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14 ஆம் தேதி மெட்ரோ ரயிலில் 4,01,607 லட்சம் போ் பயணித்துள்ளனர். பயணித்தவா்களில் சிங்காரச் சென்னை அட்டையை பயன்படுத்தி 52,84,196 பேரும், கியூ ஆா் குறியீடு பயணச்சீட்டு மூலம் 20,20,687 பேரும், இணைய வழி கியூஆா் குறியீடு பயணச்சீட்டு மூலம் 1,56,385 லட்சம் பேரும், பயணித்துள்ளனா். ஓஎன்டிசி முறையில் 12,47,168 பேரும், வாட்ஸ்ஆப் செயலி மூலம் 4,69,198 பேரும், பேடிஎம் முறையில் 3,09,569 பேரும், போன்பே பணப்பரிமாற்ற முறையில் 2,73,438 பேரும், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கைபேசி செயலி மூலம் 1,04,251 பேரும், சென்னை ஒன்செயலி மூலம் 3,10,474 லட்சம் பேரும் பயணித்துள்ளனா். டிஜிட்டல் பயணச்சீட்டுகளுக்கு 20% தள்ளுபடி'சிங்கார சென்னை' அட்டை மற்றும் வாட்ஸ்ஆப் செயலி, பேடிஎம், போன்பே மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கைபேசி செயலி மூலம் வழங்கப்படும் 'மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கைபேசி செயலி' உள்ளிட்ட டிஜிட்டல் கியூ ஆா் குறியீடு பயணச்சீட்டு தளங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் 20 சதவீதம் தள்ளுபடியை வழங்குகிறது.ஆனால், பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் 'கியூ ஆா் குறியீடு பயணச்சீட்டுகளுக்கு இந்தத் தள்ளுபடி பொருந்தாது.சென்னை மக்களுக்கு பாதுகாப்பான, திறமையான மற்றும் நம்பகமான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குவதில் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ள மெட்ரோ ரயில் நிறுவனம், பயணிகளின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்துள்ளது. சிங்காரச் சென்னை அட்டை ஒரு பிரபலமான பயணச்சீட்டு முறையாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. Chennai Metro Rail Limited (CMRL) recorded more than 1.04 crore passenger trips in August 2026என்எல்சி-ல் 347 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம்; மேலும் 713 பேரை நீக்கத் திட்டம்: அன்புமணி கண்டனம்