செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே மரகத்தினால் ஆன முருகர் சிலை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே பெருங்கருணை கிராமம். இந்த கிராமத்தில் ஆலமரங்களுக்கு இடையில் கனகமலை என அழைக்கப்படும் நடுபழனி மலை அமைந்துள்ளது. இந்த மலையின் மேற்கு அடிவாரத்தில் முருகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மரகதத்தால் ஆன முருகர் சிலை உள்ளது. இந்த நிலையில், இந்த கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்கள், கோயிலின் பூட்டை உடைத்து கருவறையில் இருந்த 2 அடி உயர மரகதத்தினால் ஆன முருகர் சிலையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கோயில் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முருகர் சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மர்ம நபர்களால் திருடப்பட்ட சிலையை மதிப்பிடும் பணிகள் நடந்து வருகின்றன. திருடுபோன முருகர் சிலையின் மதிப்பு பல லட்சம் அல்லது கோடிகள் இருக்கும் என கூறப்படுகிறது.முருகர் கோயிலில் மரகத்தினால் ஆன முருகர் சிலை திருடப்பட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Maragatha Murugar idol stolen near Chengalpattu; police investigatingபராமரிப்பின்றி அரியலூர் புதிய பேருந்து நிலையம்!