ரோபோ வாக்யூம் க்ளீனர்கள் என்றால் அது வட்டமாக இருக்கும், பெருக்கி துடைக்கும் என்றுதான் பலரும் நினைத்திருப்போம். ஆனால், அதில் பல மாடல்களில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.வட்டமாக இருப்பதால் மூலைகளில் இருக்கும் அழுக்குகளை எடுக்குமா? எந்த விலையில் வாங்கினால் நல்ல தரமானது கிடைக்கும் என்றெல்லாம் பல கேள்விகள் எழலாம்.அதாவது, ஐலைஃப் ஏ30 (ILIFE A30) என்ற வகையானது ரூ.20,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.குப்பைகளை உறிஞ்சி எடுக்கும் திறன் 13,000Pa மற்றும் லேசர் ஒலி மூலம் வீட்டின் அமைப்பைத் துல்லியமாக வரைபடம்ட எடுத்து தானே வீட்டின் அமைப்பை தீரம்னித்துச் சுத்தம் செய்யும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும்.இது மட்டுமல்லாமல் 'Y' வடிவ துப்புரவு முறைகளை பயன்படுத்தும், இதன் ஒரே வடிவமைப்பில் இரண்டு செயல்களை செய்யும் என்பதால் பல்வேறு வகையான தரைத்தளங்களை வெற்றிட முறையில் சுத்தம் செய்யவும் ) மற்றும் துடைக்கவும் உதவுகிறது.மோவாவின் E10, LDS நேவிகேஷன் மற்றும் 7.6 செ.மீ. என்ற கச்சிதமான உயரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, தாழ்வான நாற்காலிகளுக்கு அடியிலும் சென்று குப்பைகளை எடுக்கும். அதே வேளையில், வீட்டைச் சுற்றியும் எளிதாக நகரும். இது தூசி உறிஞ்சி பிறகு துடைக்கும் பணியையும் ஒருங்கிணைக்கிறது.நடுவில் இருக்கும் தடைகளை அது தானாகவே அறிந்து நகர்ந்து செல்லும்.REAME F10 ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 நிமிடங்கள் வரை இயங்கும் திறன் கொண்டிருக்கும். செயலி மற்றும் குரல் வழியாகவும் கட்டுப்படுத்தலாம் என்பது சிறப்பு.ரூ.20,000 பட்ஜெட்டிற்குள் அதிக உறிஞ்சும் திறன், நீண்ட நேரச் செயல்பாடு மற்றும் ஸ்மார்ட் நேவிகேஷன் வசதி ஆகியவற்றை விரும்பும் பயனர்கள் இவற்றை தேர்வு செய்யலாம்.Lefant M2S என்ற வாக்யூம் க்ளீனர் பிராண்ட் வைஃபை செயலியைப் பின்பற்றி செயல்படும். செல்லப்பிராணிகளின் முடிகள் அதிகம் காணப்படும் வீடுகளுக்காகவே இத்தயாரிப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.