முதல்வர் விஜய் பிரிட்டன் பயணம்? ஏன்?

Wait 5 sec.

முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன் செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழ்நாட்டின் மாநில தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சராக கீர்த்தனா பதவி வகித்து வரும்நிலையில், வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப். 4 ஆம் தேதியில் தைவான் நாட்டுக்கு அமைச்சர் கீர்த்தனா பயணம் மேற்கொள்ளவுள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தைவான் நாட்டில் செப். 4-ல் செமிகண்டக்டர், ஏஐ சிப் உள்ளிட்ட துறைகள் தொடர்பாக செமிகான் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அமைச்சர் கீர்த்தனா கலந்துகொள்வதுடன், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.அதுமட்டுமின்றி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய்யும், செப். 10-ல் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தொழிற்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய், செப். 10-ல் பிரிட்டன் செல்லவிருப்பதாகவும், செப். 16 வரையில் சுற்றுப்பயணம் முக்கிய தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதல்வர் விஜய் அழைப்பு விடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.இதன் மூலம், முதல்வராகப் பதவியேற்றதிலிருந்து அரசுமுறை பயணமாக முதன்முறையாக முதல்வர் விஜய் வெளிநாடு செல்லவிருக்கிறார்.மேட்டூா் அணையை பாசனத்துக்கு இன்று திறந்து வைக்கிறாா் முதல்வா்!Is CM Vijay visiting Britain to attract industrial investments?