ஆதார் முகமை பட்டியலிட்டிருக்கும் முகவரிச் சான்று ஆவணங்கள் எதுவும் இல்லையென்றாலும்கூட, ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றம் செய்ய முடியும்.ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பதற்கு முகவரிச் சான்றாகப் பல்வேறு வகையான ஆவணங்களை யுஐடிஏஐ (UIDAI) ஏற்றுக்கொள்கிறது. ஆதார் முகவரி மாற்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்திற்கு, முகவரியைக் கொண்ட சான்றிதழ் அவசியம். இவற்றில் ஏதேனும் ஒன்றை ஆதார் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.1. கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)2. பான் அட்டை (பான் கார்டு)3. வங்கி கணக்குப் புத்தகம் (பாஸ்புக், தபால் அலுவலக கணக்கு அறிக்கை)3. குடும்ப அட்டை4. வாக்காளர் அடையாள அட்டை5. மாற்றுத்திறனாளி அட்டை6. ஊரக வேலை அட்டை6. மின்சாரக் கட்டண ரசீதுகள் (மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது), 7. தொலைபேசி லேண்ட்லைன் கட்டண ரசீது/ தொலைபேசி (போஸ்ட்பெய்ட் மொபைல்) கட்டண ரசீது/ பிராட்பேண்ட் கட்டண ரசீது (மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)8. தண்ணீர்க் கட்டண ரசீது (மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)9. எரிவாயு இணைப்பு (மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)10. காப்பீட்டு ஆவணம் (ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு மட்டும்)11. சொத்து வரி ரசீது (ஓராண்டுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)12. குடியிருக்கும் வீட்டின் பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம்/ தானப் பத்திரம்13. பதிவு செய்யப்படாத வாடகை/ குத்தகைப் பத்திரம் இதில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து ஆதார் அட்டையில் முகவரி மாற்றிக் கொள்ளலாம்.இருப்பினும், பட்டியலிடப்பட்டுள்ள வழக்கமான ஆவணங்கள் ஒரு சிலரிடம் இருக்காது என்பதை அனைவரும் அறிவோம். விதிவிலக்குகளுக்கான சில மாற்று வழிகள் ஆதார் முகமையால் வரையறுக்கப்பட்டுள்ளன.அதிகாரிகளால் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழ் கொண்டு ஒருவர் தங்களது ஆதார் முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.முகவரியை உறுதி செய்யும் அடிப்படை ஆவணங்களோ அல்லது பயன்பாட்டுக் கட்டண ரசீதுகள், வங்கி கணக்குப் புத்தகம் போன்ற ஆவணங்களோ இல்லையென்றால், அரசு அதிகாரிகளின் கையெழுத்துப் பெற்று, புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழைத் தயாரித்து ஆதார் அட்டையில் முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.1. நாடாளுமன்ற உறுப்பினர் (MP)2. சட்டப்பேரவை உறுப்பினர் (MLA)3. அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி (Gazetted Officer)4. வட்டாட்சியர் (Tehsildar) உள்ளிட்டோரிடம் இந்த சான்றிதழை பெறலாம். இந்த ஆவணம், அதனை வழங்கும் அதிகாரியின் அதிகாரப்பூர்வ கடிதத் தலைப்பில் (letter head) வழங்கப்படுவது அவசியம். How to change the address on Aadhaar without address proof documents?