சட்டப்பேரவையில் பால் வளத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதிலளித்த அமைச்சர் சி. விஜயலட்சுமி புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. விஜயலட்சுமி வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:* ரூ. 10 கோடி மதிப்பீட்டில் ஜெர்சி கலப்பின கன்றுகளில் பால் உற்பத்தி திறன் மேம்படுத்த விஞ்ஞான பூர்வமான கன்று வளர்ப்பு மற்றும் இனவிருத்தி மேலாண்மை பணிகள் செயல்படுத்தப்படும். * ரூ. 10 கோடி மதிப்பீட்டில் 50,000 கறவை மாடுகளில் கன்று ஈனும் கால இடைவெளியை குறைக்கும் வகையில் இனவிருத்தி மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்படும்.* ரூ. 25.45 கோடி மதிப்பீட்டில் கிராமப்புறங்களில் கொள்முதல் செய்யப்படும் ஆரம்ப நிலை பாலின் தரத்தினை பாதுகாக்க 60 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் மற்றும் 40 தொகுப்பு குளிர்விப்பு நிலையங்களுக்கான கட்டடங்கள் நிறுவப்படும்.* ரூ. 8.81 கோடி மதிப்பீட்டில் 100 தொகுப்பு பால் குளிர்விப்பு நிலையங்களை மேம்படுத்தும் விதமாக துணை உபகரணங்கள் நிறுவப்படும்.* ரூ. 1.76 கோடி மதிப்பீட்டில் 15,000 பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடுகள் பராமரிப்பு மற்றும் தூய பால் உற்பத்தி குறித்த பயிற்சி மற்றும் 700 ஒன்றிய பணியாளர்கள் மற்றும் 1000 சங்கப் பணியாளர்களுக்கு தர மேலாண்மை பயிற்சி வழங்கப்படும். * செயற்கைமுறை கருவூட்டல் பணிக்காக 100 புதிய செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.* ரூ. 31.5 லட்சம் மதிப்பீட்டில் ஈரோடு ஒன்றியத்தில் தர ஆய்வகம் மற்றும் ரூ. 11.25 லட்சம் மதிப்பீட்டில் திருவண்ணாமலை ஒன்றியத்தில் தர ஆய்வகத்திற்கு கூடுதல் உபகரணங்கள் நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்படும்.* ரூ. 2 கோடி மதிப்பீட்டில் அம்பத்தூர் பால்பண்ணை மேம்படுத்தப்படும்.* பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலநிதி திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விபத்து இழப்பீடு மற்றும் நிதியுதவிகள் உயர்த்தி வழங்கப்படும்.* பால் கொள்முதலில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து, தடமறிதல் (Traceability) மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்தும் நோக்கில், பால் பண்ணைகளில் தொடக்கம் முதல் இறுதி வரை ஒருங்கிணைந்த தன்னியக்கமாக்கும் (End-to-End Automation) ரூ. 5 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.Minister C. Vijayalakshmi announced new initiatives while replying to the debate on the demand for grants for the Dairy Development Department in the Legislative Assembly.சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!