வேலூர்: வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் மயங்கி விழுந்து பெண் பலி

Wait 5 sec.

பள்ளிகொண்டா அடுத்துள்ள வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் மயங்கி விழுந்து பெண் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்துள்ள வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த மற்றும் தற்போது காஞ்சிபுரத்தில் வசித்து வரும் மேகலா (65) கோயில் கொடி மரம் அருகே திடீரென மயங்கி விழுந்து பலியானார். முதற்கட்ட விசாரணையில் நெஞ்சுவலி காரணமாக பலியாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கோயிலில் பெண் பலியானதால் கோயில் நடை தற்காலிகமாக மூடப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிகொண்டா போலீஸார் உடலை மீட்டு குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.A woman collapsed and died at the Vettuvanam Ellaiyamman Temple near Pallikonda, causing widespread grief.சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு