நிவின் பாலி - மமிதா பைஜூ நடிப்பில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் வசூல் வளர்ச்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரீஷ் ஏடி இயக்கத்தில் உருவான இந்தப் படம் முதல் நாளைவிட ஒன்பதாவது நாளில் அதிகமாக வசூலித்து, இதுவரை உலகம் முழுவதும் மொத்தமாக ரூ.173 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. திலீஷ் போத்தன், ஃபஹத் ஃபாசில் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த ஆக.21ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் மமிதா, நிவின் பாலி உடன் சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட், ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.முதல் நாளில் இந்தப் படம் ரூ.16.20 கோடி வசூலிக்க, ஒன்பதாவது நாளில் ரூ.24.25 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. உலக அளவில் ரூ.173 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.இந்தப் படம் ரூ.23 கோடி பட்ஜெட்டில் உருவாகி அதனை விட பல மடங்கு லாபம் ஈட்டியுள்ளது படக்குழுவையும் சினிமா ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. Nivin Pauly and Mamitha Baiju's Bethlehem Kudumba Unit crosses a massive ₹173.68 crore worldwide gross.The film started strong with ₹16.20 crore on Day 1 and climbed to an even bigger ₹24.25 crore by Day 9.@NivinOfficial pic.twitter.com/d9l6jTghCN— Let's X OTT GLOBAL (@LetsXOtt) August 30, 2026காவலதிகாரியாக நடிக்க 14 கிலோ உடல் எடையைக் கூட்டிய நிமிஷா சஜயன்! Higher collections on Day 9 than on Day 1: 'Bethlehem Kudumba Unit crosses Rs 170 crore!