மலையாள நடிகை நிமிஷா சஜயன் பபிதா சிங் ரிப்போர்டிங் என்ற ஹிந்தி படத்துக்காக தனது உடல் எடையை 14 கிலோ உயர்த்தியதும் பின்னர் தனது எடைக்குறைப்புக்கு உதவிய பயிற்சியாளர் பற்றியும் நீண்ட பதிவில் எழுதியுள்ளார்.தொண்டிமுதலும் த்ரிசாக்ஷியும் என்ற படத்தில் அறிமுகமானவர் நிமிஷா சஜயன். தமிழில் சித்தா படத்தில் அறிமுகமாகி நல்ல கவனம் பெற்றார். கடைசியாக அவர் நடிப்பில் டிஎன்ஏ என்ற தமிழ்ப் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஹிந்தியில் பபிதா சிங் ரிப்போர்டிங் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆக.28ஆம் தேதி அமேசன் பிரைம் ஓடிடியில் வெளியானது. நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படத்துக்கு அமிதா வியாஸ் கதை எழுத, அம்பிகா பண்டிட் இயக்கியுள்ளார். இந்தப் படம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: இந்த கதாபாத்திரத்துக்காக சுமார் 14 கிலோ (58 கிலோவில் இருந்து 72 கிலோ) உடல் எடையைக் கூட்டினேன். உண்மையில் எடைக்குறைப்பு பயணம் என்பது வேறுகதையாக இருந்தது. முதல் 10 நாள்கள் மிகவும் கடினமாக இருந்தது. சரியான தூக்கமில்லை, மனநிலை மாற்றங்கள், களைப்பு, வெறுப்பு என பல தருணங்களில் என்னால் முடியவில்லை என்றே தோன்றியது. பலமுறை எனது பயிற்சியாளரிடம் உட்கார்ந்து ‘என்னால் முடியவில்லை’ என அழுதிருக்கிறேன். எனது பயிற்சியாளர் அலி ஷிபாஸ் நீங்கள் மட்டுமில்லை என்றால் என்னால் இதைச் செய்திருக்கவே முடியாது. இந்தப் பயணத்தில் நீங்கள் எனது பாறையாக இருந்தீர்கள். கைவிட நினைக்குபோதெல்லாம் எனக்கு உந்துதல் அளித்து நடைமுறையை நம்பவைத்தீர்கள். எனது மோசமான நாள்களை நீங்கள் விமர்சிக்கவில்லை. என்னை குற்றவுணர்வுக்கும் ஆளாக்கவில்லை. ஒவ்வொரு நாளும் என்னுடன் இருந்தீர்கள். வெறுப்பாகி களைப்பில் எல்லாவற்றையும் விட நினைத்திருக்கிறேன். எப்படியோ என்னை அடுத்த நாளுக்குக் கூட்டிச் செல்வீர்கள். இந்தப் பயணத்தில் கற்றுக்கொண்டது எடைக்குறைப்பது என்பது பொறுமையும் நடைமுறையை நம்புவதும் குறிப்பாக சரியான நபர் நமது பின்னாடி இருப்பதுதான்.என்னுடன் இருந்து எனது சவால்களை எளிதாக்கியவர் நீங்கள். எனது சிறந்த பயிற்சியாளர், எனது நலம்விரும்பி, தொடர்ச்சியான ஆறுதல் அளிப்பவர். என்னை நானே நம்பாதபோதும் என்னை நம்பியதுக்கு நன்றி ஷிபுக்கா. நீங்கள் இல்லாமல் இதைச் செய்திருக்கவே முடியாது எனக் கூறியுள்ளார். View this post on Instagram ரசிகர்களிடம் அமோக வரவேற்பு: நெகிழ்ச்சியாகப் பேசிய மொத ராத்திரி பட நடிகை!Nimisha Sajayan gained 14 kg to play a police officer in Babita Singh Reporting film!