ஆர்ஜென்டீன கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் (33 வயது) ஆஸ்டன் வில்லா கிளப்பில் இருந்து செல்ஸி கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார்.ஆர்ஜென்டீன அணி கடந்த 2022 உலகக் கோப்பை வென்றதில் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் பங்கு சிறப்பாக இருந்தது. 2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 10 கோல்களை தடுத்து அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.எமிலியானோ மார்டினெஸ் தனது 17 வயதில் ஆர்செனல் அணியில் விளையாடினார். அங்கிருந்து பல அணிகளில் லோன் மூலம் பங்கேற்றுள்ளார். 2019/20 சீசனில் ஆர்செனல் அணிக்கு எஃப்ஏ கோப்பை வெல்ல உதவினார். அடுத்ததாக, எமிலியானோ மார்டினெஸ் ஆஸ்டன் வில்லா கிளப்பில் இணைவதற்கு முன்பு கம்யூனிட்டி ஷீல்டு வென்றார். 2020 முதல் 2026 வரை அந்த கிளப்பில் விளையாடினார். தற்போது, செல்ஸி கிளப்பில் மூன்று ஆண்டுகளுக்கு 7.5 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ. 96.83 கோடி) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து எமிலியானோ மார்டினெஸ், “செல்ஸிக்கு வருவது என்பது எனக்கும் எனது குடும்பத்திற்கும் எளிமையான முடிவாக இருந்தது. மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். விளையாட ஆர்வமாக இருக்கிறேன். எனது 100 சதவிகித உழைப்பைக் கொடுப்பேன். எனது கிளப், அணியினர் பெருமைக் கொள்ளும் விதத்தில் விளையாடுவேன்” எனக் கூறியுள்ளார்.He's at the Chels. — Chelsea FC (@ChelseaFC) August 30, 2026பிரீமியர் லீக்: ரூ.3,800 கோடி செலவிட்டும் கடைசி இடத்தில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்!Chelsea sign Argentine goalkeeper Emiliano Martinez from Aston Villa