பள்ளிக்கரணையை சதுப்பு நிலமாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணியும் எம்எல்ஏ சௌமியா அன்புமணியும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கக்கோரி பிரசாரத்தில் அன்புமணி பேசியதாவது, "திமுகவும் அதிமுகவும் ஊழல் செய்வதற்காகவே பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்காமல் துரோகம் செய்துள்ளனர். இரு திராவிட கட்சிகளும் ஊழல் செய்வதற்காக பள்ளிக்கரணையை சதுப்பு நிலமாக அறிவிக்கை செய்யவில்லை.தமிழ்நாட்டில் இயற்கையைப் பாதுகாக்க ஒரு அரசுகூட இல்லை. இதுவே உங்களின் சொந்த நிலமாக இருந்திருந்தால், இப்படி விட்டிருப்பீர்களா? அரசு நிலம் என்ற அலட்சியம்தான்.100 ஆண்டுகளுக்கு முன்னர் 15,000 ஏக்கராக இருந்த சதுப்பு நிலம், தற்போது 2,500 ஏக்கராக சுருங்கி விட்டது.மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்து விட்டதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தொடர்ந்து பொய் கூறி வருகிறார். மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு அமைதியாக இருப்பது நல்லதல்ல. அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.2029-ல் முதல்வர் விஜய்தான் பிரதமரா? காங்கிரஸ் அமைச்சர் பதில்The Superstar of the Legislative Assembly: Anbumani praises his wife Sowmiya Anbumani