பாரதி கண்ணம்மா புகழ் நடிகை வினுஷா தேவி, தனது நீண்டநாள் காதலரான லிங்கேஸ்வரனை கரம்பிடித்தார். இருவருக்கும் இன்று விமரிசையாக திருமணம் நடைபெற்றது. சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் நடிகை ரோஷினி ஹரிபிரியன் நடித்து வந்த நிலையில் அவருக்கு பதிலாக நடிகை வினுஷா தேவி அப்பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா -2வது பாகத்திலும் நாயகியாக நடித்து புகழ் பெற்றார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். அதற்கு பிறகு மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் சுட்டும் விழிச் சுடரே என்ற தொடரில் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்...திரையில் வெற்றிகரமான நாயகியாக வலம் வரும் வினுஷா தேவி, நீண்டநாள் காதலரான லிங்கேஸ்வரனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றது. இதன் புகைப்படங்களை ரசிகர்களுடன் வினுஷா பகிர்ந்திருந்தார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்...தற்போது இருவருக்கும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் சின்ன திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் பலர் பதிவிட்டுள்ளனர். சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வினுஷா - லிங்கேஸ்வரன் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நிஜ வாழ்க்கையில் அடுத்தகட்டத்துக்குச் செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா, ராஜி!