கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி (39 வயது) ஃபிரி கிக்கில் கோல் அடித்தவர்கள் பட்டியலில் 74 கோல்களுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். எம்எல்எஸ் தொடரில் லியோனல் மெஸ்ஸியின் (39 வயது) அபாரமான ஆட்டத்தினால் இன்டர் மியாமி அணி 7-1 என மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.இந்தப் போட்டியில் மெஸ்ஸி 40, 52, 83, 90+6ஆகிய நிமிஷங்களில் கோல் அடித்து மிரட்டினார். அத்துடன் 80ஆவது நிமிஷத்தில் லூயிஸ் சௌரஸுக்கு மெஸ்ஸி ஒரு அசிஸ்ட் செய்தும் அசத்தினார்.இந்த நான்கு கோல்களில் இரண்டு கோல்கள் ஃபிரி கிக் மூலம் அடித்தார். அதிலும் 90+6ஆவது நிமிஷத்தில் அடித்த அந்த ஃபிரி கிக் கோல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் பிரேசில் வீரர் மார்செலினோ கரியோகா 78 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். லியோனல் மெஸ்ஸி இன்னும் 5 ஃபிரி கிக் கோல் அடித்தால் முதலிடத்தைப் பிடிப்பார். தற்போது ஓய்வு பெறாமல் விளையாடும் வீரர்களில் மெஸ்ஸி முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்டியானோ ரொனால்டோ 63 கோல்களுடன் இந்தப் பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கிறார். ஃபிரி கிக்கில் அதிக கோல்கள் அடித்தவர்கள் 1. மார்செலினோ கரியோகா - 782. லியோனல் மெஸ்ஸி - 74* 3. ஜாயிர் டா ரோசா பின்டோ - 744. ராபர்ட்டோ டைனமைட் - 735. ஜுனினோ பெர்னம்புகானோ - 726. மார்கோஸ் அசுன்சாவ் - 68 7. சினிசா மிஹைலோவிச் - 67 8. ஜார்ஜ் அரவேனா - 65 9. கிறிஸ்டியானோ ரொனால்டோ - 63*10. ஜிகோ - 62 11. தியாகோ மாரடோனா - 61Not one, but TWO Leo Messi free kick goals in one game (via @MLS) pic.twitter.com/V5J6eXxrYg— B/R Football (@brfootball) August 30, 2026ரூ.100 கோடிக்கு செல்ஸி கிளப்பில் இணைந்த கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ்!Most goals from free-kicks: Messi moves up to second place!