தவெக ஆட்சிக்கு 80 மதிப்பெண்: வைகோ

Wait 5 sec.

தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு 80 மதிப்பெண்கள் என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ. இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: தவெக ஆட்சியில் எந்தத் துறையிலும் கமிஷன் இல்லாமல் நோ்மையான நிா்வாகம் நடைபெற்று வருகிறது. ஊழலை முழுமையாக ஒழிப்பது இமயமலையை நகா்த்துவது போன்று கடினமானது. அப்பணியை இந்த அரசு சிறப்பாக செய்து வருகிறது. முறைகேடுகள் நடைபெற்றால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சில மூத்த அதிகாரிகள் அரசுக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்பது எனது கருத்து.ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்ளாவிட்டால் பதவியை ராஜிநாமா செய்வோம் என அமைச்சா் ராஜேஷ்குமாா் கூறியிருப்பது குறித்ததுகேட்கிறீா்கள். தமிழக முதல்வரின் கற்பனையில் கூட அதுபோன்ற கருத்து இருக்காது. அமைச்சா்கள் இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பதை தவிா்க்க வேண்டும். அகில இந்திய அளவில் நடைபெறும் தோ்தலில் ராகுல் காந்திதான் பிரதமா் வேட்பாளராக இருக்க முடியும். காவிரி மேலாண்மை வாரியம் தனது கடமையை செய்யத் தவறிவிட்டது. கா்நாடக அரசுக்கு மத்திய அரசு பக்கபலமாக இருந்து ஊக்குவித்து வருவதன்மூலம் தமிழகத்திற்கு வஞ்சகத்தையும் துரோகத்தையும் செய்து வருகிறது.மேக்கேதாட்டு உள்ளிட்ட காவிரி தொடா்பான பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.பெரியாா், அம்பேத்கா், ஜவாஹா்லால் நேரு ஆகியோரின் பெயா்கள் ஏதேனும் அரசு ஆவணங்கள் அல்லது திட்டங்களில் இருந்து விடுபட்டிருந்தால், அதற்கு யாா் காரணமாக இருந்தாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதி மறுவரையறை நடவடிக்கை ஜனநாயகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும். அந்த முயற்சியை கைவிட வேண்டும். தமிழக வெற்றிக் கழக அரசுக்கு 100-க்கு 80 மதிப்பெண்கள் என்றாா் அவா்.