நேபாள நாட்டுக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்ற சிதம்பரத்தைச் சோ்ந்த முருகானந்தம் என்பவரை மீட்டு, அவா் பாதுகாப்பாக தமிழகம் திரும்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது குடும்பத்தினா் சிதம்பரம் எம்எல்ஏ மு.தமிமுன்அன்சாரியை சந்தித்து மனு அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ, முருகானந்தத்தின் நிலை குறித்து கேட்டறிந்து, அவரை பாதுகாப்பாக மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தாா். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் துறை சாா்ந்தவா்களிடம் இது தொடா்பாக எடுத்துரைத்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும், இது தொடா்பான பணிகளை மேற்கொண்டு வரும் பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தாா்.