40 நாள்களில் நிறைவடைந்த ஜீவாவின் தகப்பன் படப்பிடிப்பு!

Wait 5 sec.

நடிகர் ஜீவா நடித்துள்ள தகப்பன் படத்தின் படப்பிடிப்பு 40 நாள்களில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.கிடா படத்தின் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா - ரஜிஷா விஜயன் இணைந்து நடித்துள்ள படம் தகப்பன். மாமன், கருடன் ஆகிய வெற்றிப்படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து உருவாகும் ஆழமான குடும்பக் கதையாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது.படப்பிடிப்பு தொடங்கிய அதே மேலூர் பகுதியில் உள்ள மேலவளவு கருப்பு கோயிலிலேயே படத்தின் இறுதிக்கட்ட இரவு நேரப் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது.இந்த ஆண்டு டிசம்பர் மாதம் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.இந்தப் படத்துக்கு முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார்.நடிகர் ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தகப்பன் படம் ரசிகர்கள் மத்தியில் ஆவலைத் தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.Every frame holds a feeling. Every moment carries a memory❤️#Thagappan Shooting Wrapped!In Cinemas December 2026.@larkstudios1 @rajisha_vijayan @LakshmyRamki @ravenkatdir83 @dopmsukumar @kumarkarupannan @thinkmusicindia @proyuvraaj pic.twitter.com/VAFVHKSDGS— Jiiva (@JiivaOfficial) August 30, 2026எம்.எஸ். பாஸ்கரின் ‘விடியும் காத்திரு’: மிரட்டும் முதல் பார்வை போஸ்டர்!The film crew has announced that the shooting of the movie Thagappan, starring actor Jiiva, was completed in 40 days.