பிக் பாஸ் 10: சின்ன மருமகள், தாய்மாமன் தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

Wait 5 sec.

வரும் செப். 6 ஆம் தேதி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10 சீசன் தொடங்கவுள்ளதால், சின்ன மருமகள், தாய்மாமன் தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சின்ன மருமகள்மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் சிக்கியுள்ள, தமிழ்செல்வியின் கதையை சொல்லும், "சின்ன மருமகள்" தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.இந்தத் தொடரில் நடிகை ஸ்வேதா நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக நவீன்குமார் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் தாமரைச் செல்வி, பானுமதி, சங்கவி ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி ஒளிபரப்பாகி வந்த சின்ன மருமகள் தொடர், வரும் செப். 7 ஆம் தேதி முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.தாய்மாமன்நடிகர் ரஞ்சித் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் தொடர் தாய்மாமன். மேலும் இந்தத் தொடரில் தேவிப்பிரியா, ராஜ் கபூர், சாஸ்திக், ஷியாரா ஷாலினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மனோஜ் இயக்கும் இந்தத் தொடரை, பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.அண்ணன் பாத்திரத்தில் ரஞ்சித் நடிக்கிறார். தங்கை பாத்திரத்தில் தேவி பிரியா நடிக்கிறார். இவர்களுக்கிடையே நடக்கும் பாசப் போராட்டம், பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த இந்தத் தொடர், செப். 7 ஆம் தேதி முதல் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும்.As the 10th season of the Bigg Boss show is set to air starting September 6, the broadcast timings for the serials Chinna Marumagal and Thaai Maaman have been changed.பிக் பாஸ் - 10 நிகழ்ச்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! முன்னோட்ட விடியோ!