ஆம்பூா் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் பாதுகாவலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் பாதுகாவலா்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. ஆம்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மெஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் பயிற்சி அளித்தனா். மேலும் அவா்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.