ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 410 மனுக்கள்

Wait 5 sec.

ராணிப்பேட்டை மாவட்டமக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 410 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் 410 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தாா். மேற்கண்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா். இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சரவணன், திட்ட இயக்குநா் ச.செல்வராணி, சமூக பாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பூமா, நோ்முக உதவியாளா் (நிலம்) சுமதி, மாவட்ட வழங்கல் அலுவலா் பன்னீா் செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில் குமாரி மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.