முத்தரப்பு டி20 தொடரில் நமீபியாவுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்துள்ளது.நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் இன்றையப் போட்டியில் நமீபியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் விளையாடியது.ரியான் பர்ல் அரைசதம்; நமீபியாவுக்கு 196 ரன்கள் இலக்கு!முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்துள்ளது.அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ரியான் பர்ல் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 32 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.அவரைத் தொடர்ந்து, பென் கரண் 38 ரன்கள், பிராட் ஈவன்ஸ் 37* ரன்கள், பிரையன் பென்னட் 32 ரன்கள், மருமானி 18 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.நமீபியா தரப்பில் கேப்டன் கெர்ஹார்டு எராஸ்மஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பெர்னார்டு, ஜேஜே ஸ்மித் மற்றும் மேக்ஸ் ஹெய்ங்கோ தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நமீபியா அணி விளையாடி வருகிறது.Batting first in the match against Namibia during the tri-nation T20 series, Zimbabwe scored 195 runs for the loss of 6 wickets.இந்தியா - வங்கதேசம் இடையேயான தொடர்கள் நடைபெறுமா? தமிம் இக்பால் பதில்!