சென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சி (செப். 1)

Wait 5 sec.

வாரத்தின் 2வது வணிக நாளின் முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிந்தன. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள் கச்சா எண்ணெய் விலை, பத்திரங்களின் வருவாய் உயர்ந்ததால் இந்தியப் பங்குச் சந்தைகள் சற்று சரிவைச் சந்தித்தன. வங்கி மற்றும் ஆட்டோ துறை பங்குகள் அதிகம் சரிவைக் கண்டன. இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,994 புள்ளிகளுடன் தொடங்கியது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த பங்குச் சந்தை அதிகபட்சமாக 77,231 புள்ளிகள் வரை உயர்ந்தது. எனினும் பிற்பாதியில் தொடர்ந்து சரிந்தது, தொடங்கிய இடத்திற்கு அருகே வந்தது. வணிக நேர முடிவில் 12.9 புள்ளிகள் சரிந்து 76,944 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் 0.017% சரிவாகும். தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 24,077.55 புள்ளிகளுடன் தொடங்கியது. நேர்மறையாக இருந்ததால் படிப்படியாக உயர்ந்து அதிகபட்சமாக 24,143.15 புள்ளிகள் வரை உயர்ந்தது. எனினும் வணிக நேர முடிவில் 24.60 புள்ளிகள் சரிந்து 24,055 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.10% சரிவாகும். இனி 60 டிகிரி செல்சியஸ் வெந்நீரிலும் துணி துவைக்கலாம்! கறைகளை எளிதில் நீக்கும் வாஷிங் மெஷின்!Stock market Sensex ends marginally lower, Nifty below 24,100