9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்குதன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் உடைய ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு. மனமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். எனினும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம் உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்களுக்கு மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். பரிகாரம்: சிவனை வணங்க எல்லா இடையூறும் விலகும். முற்பிறவி பாவம் நீங்கும்.