8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்குஎடுத்த காரியத்தை முடிப்பதே குறிக்கோளாக உடைய எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் பணவரத்து இருக்கும். மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். அரசியல்வாதிகள் திட்டமிட்ட எந்த பணிகளும் துரித கதியில் நடைபெறும். கலைத்துறையினருக்கு தொழிலில் இருந்த பிரச்சனைகள் அகலும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும்.