இன்று மாதத்தின் முதல் நாள் (செப். 1) என்பதால், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.அதன்படி, சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 10.50 உயர்ந்து, ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், 14.2 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமுமின்றி ரூ. 957.50-க்கு விற்பனையாகிறது.உலகளாவிய சந்தை நிலவரங்கள், கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள், துறைமுகக் கட்டணங்கள், சுங்க வரிகள், சரக்குக் கட்டணங்கள், ஜிஎஸ்டி, பிற செலவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான எச்பிசிஎல், இந்தியன் ஆயில் உள்ள நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகிதக்கும்மேல் இறக்குமதிதான் செய்யப்படுகிறது. உலகளாவிய அரசியல் பதற்றம் அல்லது உற்பத்திக் குறைப்பால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், இந்தியாவிலும் எரிபொருள் விலை உயரும்.கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் - அமெரிக்கா இடையே போர் தொடங்கியதிலிருந்து சிலிண்டரின் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.மேட்டூா் அணையை பாசனத்துக்கு இன்று திறந்து வைக்கிறாா் முதல்வா்!Price of commercial cylinders hiked in Chennai