இன்றைய சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம், ஆக. 17 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரையில் பல்வேறு துறைகளின் மீதான விவாதம் நடைபெற்றுள்ளது.திங்கள்கிழமையில் (ஆக. 31) மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலன் உள்ளிட்ட துறைகள் மீதான விவாதம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து, இன்று (செப். 1) நடைபெறவுள்ள சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைகளில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.மேலும், தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்த) சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டு, கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்படும்.சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வுThe debate on demands for grants in today's TN Assembly session