சட்டப்பேரவை உறுப்பினர்களுக்காக ரூ. 23 கோடி செலவில் உடற்பயிற்சிக் கூடம் கட்டப்பட்டு வருவதாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பேசியதாவது, "சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் சில வசதிகளைச் செய்துதர வேண்டும் என முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.உங்களுக்காக ரூ. 23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, என்னென்ன தேவையோ தங்குதடையின்றி விரைவாகச் செய்துகொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.ஏறத்தாழ ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு, உடற்பயிற்சி உபகரணங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.தொகுதி மக்களுக்காகக் கவலைப்படுகிற நீங்கள், உங்கள் உடல்நலத்திலும் கவனம் செலுத்தி, உடற்பயிற்சிக் கூடத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.A gymnasium is being constructed at a cost of ₹23 crore to safeguard the health of MLAs, says Assembly Speaker JCD Prabhakar