அதிமுகவும் நாமும் ஒன்றுதான் என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் இன்று (செப்.1) காலை 9.30 மணிக்கு அவை கூடிய நிலையில், கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது.சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது, பூவிருந்தவல்லி தொகுதி எம்எல்ஏ பிரகாசம், “பூவிருந்தவல்லி தொகுதியில் செவ்வாய்பேட்டை ரயில்வே மேம்பாலம் பல ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளது. அதை விரைவில் முடித்து தருமாறு பேரவைத் தலைவர் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.இதற்குப் பதிலளித்துப் பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "திருவள்ளூர் நமது மாவட்டம், அங்கு 10-க்கு 10 வென்றுள்ளோம், சட்டப்பேரவை உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்றார். இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணியில் அதிமுக வென்றுள்ளது என எதிரில் இருந்து குரல் எழுப்பப்பட்டது.இதனைத் தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா, ”10ல் 9 தொகுதிகளைக் வென்றோம், அதுவும் நம்முடையதுதானே, அதிமுகவும் நாமும் ஒன்றுதானே.நமக்கும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கும் இருக்கும் உறவைக் கூறினேன் என்று ” எனத் தெரிவித்தார். அவர் பேசியதற்கு பேரவைத் தலைவர் உள்பட உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர்.Public Works Minister Aadav Arjuna stated in the Legislative Assembly that the AIADMK and 'we' are one and the sameதங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! (செப். 1)