4 கோல்கள், 1 அசிஸ்ட்; மெஸ்ஸியின் மாஸ்டர்கிளாஸ்..! இன்டர் மியாமி மிகப்பெரிய வெற்றி!

Wait 5 sec.

எம்எல்எஸ் தொடரில் லியோனல் மெஸ்ஸியின் (39 வயது) அபாரமான ஆட்டத்தினால் இன்டர் மியாமி அணி 7-1 என மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. எம்எல்எஸ் தொடரிலன் இன்றைய ஆட்டத்தில் இன்டர் மியாமி அணி தனது சொந்த மண்ணில் மான்ட்ரியல் அணியுடன் அதிகாலையில் மோதியது. இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி 40, 52, 83, 90+6ஆகிய நிமிஷங்களில் கோல் அடித்து மிரட்டினார். அத்துடன் 80ஆவது நிமிஷத்தில் லூயிஸ் சௌரஸுக்கு மெஸ்ஸி ஒரு அசிஸ்ட் செய்தும் அசத்தினார். இந்த நான்கு கோல்களில் இரண்டு கோல்கள் ஃபிரி கிக் மூலம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஃபிரி கிக் கோல்களைப் பார்க்கும்போது பிரைம் மெஸ்ஸியின் ஆட்டத்தைப் பார்ப்பதுபோல் இருப்பதாக வர்ணனையாளர்கள் கூறினார்கள். இந்தப் போட்டியில் மெஸ்ஸியைத் தவிர்த்து லூயிஸ் சௌரஸ், காசிமிரோ, அலெக்சான்டர் ஷா கோல் அடித்து உதவினார்கள். மான்ட்ரியல் அணி சார்பாக 37ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் இன்டர் மியாமி 55 சதவிகித நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அடித்த 18 ஷாட்டுகளில் 12 முறை இலக்கை நோக்கி அடிக்கப்பட்டது. 591 பாஸ்களில் 91 சதவிகித துல்லியத்துடன் பந்தை பாஸ் செய்து இன்டர் மியாமி அணியினர் அசத்தினார்கள். PÓKER DE LEO MESSI!4️⃣ pic.twitter.com/ORBlE7ujXN— Inter Miami CF (@InterMiamiCF) August 30, 20264 goals, 1 assist; Messi's masterclass...! A massive win for Inter Miami!