ஒகேனக்கல் காவிரி ஆற்றில்நீர்வரத்து திடீர் உயர்வு! பரிசல் இயக்கத் தடை நீட்டிப்பு!

Wait 5 sec.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று(ஆக. 30) விநாடிக்கு 11,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 11,000 கனஅடியாக அதிகரித்து தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவார் பாணி, பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை, தொடர்ந்து 15-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவுகளை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் அருவி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்துள்ளனர்.இதனால், தொங்கும் பாலம், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம், மீன்கள் விற்பனை நிலையம், உணவு அருந்தும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.The water inflow into the Cauvery River at Hogenakkal has increased to 11,000 cubic feet per second today (August 30).103 பேர் அல்லர்; வெள்ளத்தின்போது நேபாளத்தில் இருந்தது 400 தமிழர்கள்! அமைச்சர் ராஜ்மோகன் தகவல்