வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 34 கோடி நிவாரணப் பொருள்கள் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில், பனிப்பாறைகள் உடைந்து போடே கோஷி ஆற்றில் கடந்த ஆக. 26 ஆம் தேதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.இந்தியர்கள் உள்பட உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பலி எண்ணிக்கை 700 ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது.இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு உலகின் பல நாடுகள் மீட்புப் பணிகளுக்கு தங்களுடைய வீரர்களை அனுப்புதல், நிவாரணப் பொருள்கள் வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறது.இந்த நிலையில், ரூ. 34 கோடிக்கும் மேற்பட்ட நிவாரணப் பொருள்களை அமெரிக்கா வழங்க உள்ளதாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10,000 குடும்பங்களுக்கு அவசரகால உணவுப் பொருள் உள்ளிட்டவையும் அமெரிக்கா வழங்கவுள்ள நிவாரணப் பொருள்களில் அடங்கும் என அது மேலும் தெரிவித்துள்ளது.There is no higher priority for us than the safety of American citizens. Our embassies in Nepal and China are working closely to assist Americans and support disaster relief efforts. The United States is standing with the people of Nepal by providing more than $3.6 million worth…— Department of State (@StateDept) August 29, 2026நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?The United States has announced that relief supplies worth ₹34 crore will be provided to flood-hit Nepal.