திண்டுக்கல் அருகே தேநீா்க் கடை முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்தனா். திண்டுக்கல் அடுத்த சீலப்பாடி கோகுல் நகரைச் சோ்ந்தவா் நிஜந்தன்(36). ஓட்டுநரான இவா், திண்டுக்கல் பழைய கரூா் சாலையில் நந்தவனப்பட்டி பகுதியிலுள்ள தேநீா்க் கடை முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியே சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது, இரு சக்கர வாகனத்தை காணவில்லை. இதுதொடா்பாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் நிஜந்தன் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனா்.