ரதிமா பாடலை 100 முறைக்கும் அதிகமாக கேட்டுள்ளேன்: அட்லீ

Wait 5 sec.

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் ரதிமா பாடலை இயக்குநர் அட்லீ 100 முறைக்கும் மேல் கேட்டுள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார். இன்டிபென்டட் இசை எனப்படும் தனியிசைப் பாடல்கள் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாய் அபயங்கர். இவரது முதல் பாடலான ’கட்சி சேர’ மிகப்பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து, அடுத்தடுத்த பாடல்களும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.இதனைத் தொடர்ந்து, ட்யூட் படம் மூலம் தமிழில் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமான இவர், அடுத்தடுத்து 10 முக்கியமான படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.சில மாதங்களுக்கு முன் வெளியான கருப்பு திரைப்படத்தில் இவரின் இசை பெரிதும் பேசப்பட்ட நிலையில், அதே சமயம் வெளியான இவரது ‘பவழ மல்லி’ பாடலும் பெரியளவில் ஹிட் ஆனது. அப்பாடலில், இவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்திருந்தார்.இந்த நிலையில், கடந்த ஆக.24ஆம் தேதி ரதிமா பாடல் வெளியானது. விவேக் எழுதிய இந்தப் பாடலைப் பாடி இசையமைத்திருந்தார் சாய் அபயங்கர். இந்தப் பாடலும் வைரலாகியது. இது குறித்து இயக்குநர் அட்லீ கூறியிருப்பதாவது: இந்தப் பாடல் மிகவும் பிடித்துள்ளது! இந்தப் பாடல் வெளியானதில் இருந்து 100 முறைக்கும் மேல் கேட்டிருப்பேன். ஒவ்வொரு முறையும் முன்னதைவிட நன்றாக இருக்கிறது. மிக மிக பெருமையாக இருக்கிறது சாய். நீங்கள் மெட்டமைத்துள்ள விதம், ஒவ்வொரு பாடலையும் வெளியிடும் விதம் மற்றும் முந்தைய பாடலை முந்தும் அளவுக்குச் சிறப்பாக செய்து வருகிறீர்கள். ரதிமா தற்போதைக்கு வைரல் பாடல். பாக்யஸ்ரீ போர்ஸ் மிகவும் அழகாக இருக்கிறார். சாய் அபயங்கரின் மிகப்பெரிய ரசிகன் நான். அடுத்த பாடலை எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து உயர பறக்க வாழ்த்துகள். பெருமையாக கருதுகிறேன். லவ் யூ சாய். உனக்காக உண்மையாகவே மகிழ்கிறேன். நல்ல நடனம். அற்புதமான வரிகள் விவேக். பாடல் குழுவுக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார். @SaiAbhyankkar @Lyricist_Vivek @thinkmusicindia @BhagyashriBose pic.twitter.com/i6Hsz7mOt0— atlee (@Atlee_dir) August 31, 2026ரவி மோகன் திரைப்படத்திற்கு இசையமைக்கும் கெனிஷா?I have listened to the 'Rathima' song more than 100 times: Atlee