சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பெண்ணைக் கொன்று உடல் பாகங்களை சூட்கேஸில் அடைத்து ரயிலில் ஏற்றி, மற்ற பாகங்களை பிரியாணி டபராவில் வேக வைத்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.முன்னதாக, கொலையாளி மாணிக் உத்தின் லஸ்கர் மணிப்பூரில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவரது மனைவி பகமதி மாஜியும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.அசாமைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், கூடுவாஞ்சேரியில், இவரும் மனைவியும் தங்கியிருந்துள்ளனர். தான் பணியாற்றிய நிறுவனத்தில் சேர்ந்த ஹைதுல் நிஷாவுடன் தனக்கு தொடர்பு ஏற்பட்டு அவரும் தன்னுடைய வீட்டுக்கு அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார்.இது பற்றி மனைவி பகமதிக்குத் தெரிந்ததால், குடும்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. ஹைதுல் நிஷா, தன்னையும் திருமணம் செய்துகொள்ளுமாறு மாணிக்கை வற்புறுத்தியிருக்கிறார்.இதனால், நிஷாவை கொன்றுவிட்டு, மனைவியுடன் தப்பிச் செல்ல மாணிக் திட்டமிட்டுள்ளார். அதன்படி, நிஷாவை கொன்று உடல் பாகங்களை சூட்கேசில் வைத்து ரயிலில் ஏற்றிவிட்டு, தலையை ஓரிடத்தில் வீசிவிட்டு, மீதி உடல் பாகத்தை காய்கறிகள் சேர்த்து பிரியாணி அண்டாவில் வேகவைத்துள்ளனர். அதனை அப்புறப்படுத்துவதற்குள் காவல்துறைக்கு தகவல் தெரிந்துவிட்டதால் தப்பியோடியதாகக் கூறியுள்ளார்.இருவரும் ஒரிசா சென்று அங்கிருந்து மணிப்பூருக்கு தப்பியிருக்கிறார்கள். இது குறித்து அறிந்து மணிப்பூர் சென்று, கடும் மழைக்கு இடையே தாம்பரம் காவல் ஆணையர் தலைமையிலான குழு அங்கு ஒரு வார காலத்துக்கும் மேல் தங்கியிருந்து குற்றவாளிகளின் நடமாட்டத்தை அறிந்து கைது செய்திருக்கிறார்கள்.நிஷாவின் தலை எங்கே வீசப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னையிலிருந்து புது தில்லி சென்ற ரயிலில் சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த போது, மனித உடல்களை வெட்டி பிரியாணி டபராவில் காய்கறிகளையும் சேர்த்து வேக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அவர்கள் என்ன செய்ய திட்டமிட்டிருந்தனர், நாய்களுக்கு வீசவிருந்தார்களா என்றும் தெரியவில்லை.சென்னை கூடுவாஞ்சேரியில் பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பியோடிய அசாமைச் சேர்ந்த் மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகமதி மாஜி ஆகியோர் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக தேடப்பட்டு வந்தநிலையில் இரண்டு பேரும் அடுத்தடுத்து மணிப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு சூட்கேஸை கொண்டு வந்து புது தில்லி சென்ற ரயிலில் வைத்த போது பதிவான சிசிடிவி பதிவுகளின் மூலம் இவர்களது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.முதலில் கொலையானவர் ஆண் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பெண் என்பது தெரிய வந்துள்ளது.கொலை செய்யப்பட்டவர் ஹைதுல் நிஷா என்பதும் இவர் தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர், கொலையாளிகளுடன் தங்கியிருந்த நிலையில் காணாமல் போனதாக அவரது மகன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். Human body found in a suitcase and a biryani vessel! Second accused arrested too! Where is the head? Why was the murder committed?