சென்னை மாதவரத்தில் புதிய குடிநீர் இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக குடிநீர் வாரிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர். மாதவரம் பொன்னியம்மன்மேடு 29-வது வார்டு பகுதியில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக பணிபுரிபவர் முருகன். இவர் பொன்னியம்மன்மேடு பகுதியில் பகுதியில் புதிதாக குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ரூ.20 லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் கிடைத்ததாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட அலுவலகத்தை கண்காணிக்கத் தொடங்கினர். இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை பொன்னியம்மன்மேடு பகுதியில் உள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மறைந்திருந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் உதவி பொறியாளர் முருகனை, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.குடிநீர் இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக உதவிப் பொறியாளர் ஒருவரை, அங்கு மறைந்திருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர், அவரை கையும் களவுமான கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், லஞ்சப் பணம் தொடர்பான விவரங்கள் மற்றும் வேறு யாருக்கேனும் இதில் தொடர்புள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.லஞ்சம் மற்றும் ஊழலை தடுக்கும் வகையில் அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், அரசு அலுவலகங்களில் மக்களின் அடிப்படை தேவைகளுக்கான சேவைகளை வழங்குவதில் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் குடிநீர் இணைப்பு போன்ற அத்தியாவசிய சேவைக்காக லஞ்சம் வாங்கியதாக அரசு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ₹20,000 bribe for drinking water connection; Assistant Engineer arrested821 பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு