நடிகர் நானி நடித்துள்ள தி பாரடைஸ் எனும் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனமாடியுள்ள பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானி இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.ஆக்சன் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் செப். 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தப் படத்தில் நாயகியாக கயாது லோஹர் நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ், மோகன் பாபு, சோனல் குல்கர்னி நடித்துள்ளார்கள்.ஸ்ரீகாந்த் ஒடேலா இயகிய தசரா திரைப்படத்தில் நானி - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது, இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனமாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தப் பாடல் இன்று (ஆக.29) காலை வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், தாமதமாக மதியம் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை கசர்லா ஷியாம் எழுத ஜானகி ரெட்டி, பிரபா பாடியுள்ளார்கள். முதல் பாடலைத் தொடர்ந்து இந்தப் பாடல் மிகவும் கவனம் பெற்று வருகிறது.படம் பிடிக்கவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்: தெலுங்கு நடிகை ஸ்வேதாYeshanagula The Paradise film song Nani with Keerthy Suresh