பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!

Wait 5 sec.

இந்தியாவின் ஒலிம்பிக்ஸ் சாம்பியன் நீரஜ் சோப்ரா (28 வயது) ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் நகோயாவில் வருகிற செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளன. இதில், இந்தியா சார்பில் பங்கேற்க 492 விளையாட்டு வீரர்களுக்கு இந்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்ஸ் 2020ல் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா 2024ல் வெள்ளி வென்றார். 2023ல் முதல் இந்தியராக உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் நட்சத்திர வீரரான இவர் தற்போது காயத்தினால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.அடுத்தாக ஜப்பானில் நடைபெறும் கான்டினென்டல் சோபீஸிலும் பங்கேற்கமாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. லொசான் டைமண்ட் லீக்கில் சிறப்பாக செயல்பட்ட நீரஜ் சோப்ரா இது குறித்து கூறியதாவது: பல ஆண்டுகளின் கடின உழைப்பினால், என்னால் சிறப்பான தருணத்தை லொசான் சீசனில் கொண்டு வர முடிந்தது. பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக எனது கணுக்காலில் சதைக் கிழிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவக்குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த சீசனில் ஓய்வு பெறுவது நல்லதென முடிவெடிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு எனது கவனம் நலமாகி வலுவாக திரும்பி வரவேண்டும் என்பதிலேயே இருக்கிறது. தற்போதுதான் நல்ல ரிதமிற்கு வந்தேன். அதற்குள்ளாக இப்படியானது வருத்தமாக இருக்கிறது. காயம் என்பது விளையாட்டின் ஒரு பகுதி என்கிறார்கள். என் மீதான அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.கோவை 3-ஆவது முறையாக சாம்பியன்Neeraj Chopra ruled out of Asian Games and rest of 2026 season with ankle ligament tear